Musasi Movie : மீண்டும் மிடுக்கான போலீசாக பிரபுதேவா.. மிரட்டும் Master மஹேந்திரன் - வெளியானது Musasi பட Prevue

Actor Prabhudeva : பிரபல நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் Musasi. தற்போது இந்த படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

Share this Video

தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபுதேவா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். அதேபோல தமிழில் வெளியான தேவி, போகன் மற்றும் "சம் டைம்ஸ்" உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்தும் வழங்கியிருக்கிறார். 

கடந்த சில வருடங்களாக தமிழில் மீண்டும் களமிறங்கியுள்ள பிரபுதேவா நடிப்பில் இறுதியாக பகிரா என்கின்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்கியது பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சில திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து கலக்கிய பிரபு தேவா தற்பொழுது மீண்டும் இயக்குனர் ஷாம் என்பவர் இயக்கும் "முசாசி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். 

மாஸ்டர் மகேந்திரன், VTV கணேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படத்திலிருந்து ஒரு Prevue காட்சி வெளியாகி உள்ளது. மக்கள் மத்தியில் இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் பிரபுதேவா அவர்கள் தளபதி விஜய் அவர்களுடைய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

Related Video