இருக்கு; கண்டிப்பா செம Fun இருக்கு; நெல்சன் தயாரிப்பில் கவின் அசத்தும் Bloody Beggar - டீசர் இதோ!

Bloody Beggar Teaser : பிரபல நடிகர் கவின் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் அசதியுள்ள திரைப்படம் தான் ப்ளடி பெக்கர்.

First Published Oct 7, 2024, 11:54 PM IST | Last Updated Oct 7, 2024, 11:54 PM IST

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார், முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள திரைப்படம் தான் ப்ளடி பெக்கர். அவரிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி வந்த சிவபாலன் முத்துக்குமார் என்பவர் முதல் முறையாக இயக்குனராக இந்த திரைப்படத்தின் மூலம் களமிறங்கி இருக்கிறார். 

ஏற்கனவே டாடா மற்றும் ஸ்டார் போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகர் கவின், முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் இப்போது ப்ளடி பெக்கர் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். நடிகர் கவினை பொறுத்தவரை வித்யாசமான நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். வெற்றிமாறன் தயாரிப்பில் அவர் ஒரு படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வருகின்ற தீபாவளி திருநாளுக்கு சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தோடு மோத உள்ள ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் தழும்பும் ஒரு ஜனஞ்சகமான படமாக இது இருக்கும் என்பதை இந்த டீசரை நமக்கு காட்டி இருக்கிறது. அதுமட்டுமல்ல இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார், தன்னுடைய ஆசான் திலீப் குமாரை போல நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதையும் இந்த திரைப்படம் உணர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Video Top Stories