இப்படி ஒரு பாட்டு பாத்திருக்கவே மாட்டீங்க; கவினின் Bloody Beggar - வெளியானது Beggar Waala சாங்!
Bloody Beggar : கவின் நடிப்பில் தீபாவளி ரிலீஸ் படமாக வெளியாகவுள்ளது ப்ளடி பெக்கர் என்ற படம். அப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ப்ளடி பெக்கர். வருகின்ற தீபாவளி திருநாளன்று உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகிறது. இதுவரை சாக்லேட் பாயாக வலம்வந்த கவின், இந்த படத்தில் ஒரு பிச்சைக்காரரின் வேடத்தை ஏற்று நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பாளராக களமிறங்குகிறார். மேலும் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து பெக்கர் வாலா என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பாடல் திரைப்படத்தில் இடம்பெறாது என்று கூறப்படுகிறது. உண்மையில் நடிகர் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த ஆண்டு ஸ்டார் என்று படத்தில் அவர் நடித்திருந்த நிலையில் கிஸ், மாஸ்க், ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் கவின் நடிப்பில் உருவாகி வருகின்றது. மேலும் பிரபல நடிகை நயன்தாராவுடன் ஒரு படத்தில் கவின் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.