Watch : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி!
பல வருடங்களுக்குப் பிறகு கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது மன நிம்மதியை அளிக்கிறது என்றும் ஆத்ம திருப்தி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்
மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கார்த்தி வந்துள்ளார். இன்று அதிகாலை ஆறு மணி அளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வந்த கார்த்தி, மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது மன நிம்மதியை அளிக்கிறது என்றும் ஆத்ம திருப்தி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்