கைதி 2 கண்டிப்பா LCU படம் தான்; "அவரும்" கண்டிப்பா இருக்காரு - சஸ்பென்ஸை உடைத்த கார்த்தி!

Kaithi 2 : பிரபல நடிகர் கார்த்தி, தனது கைதி படத்தின் 2ம் பாகம் குறித்து முக்கியமான 2 தகவல்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Share this Video

இன்று பிரபல நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமர்சியாக நடைபெற்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் பங்கு பெற்று நடிகர் சூர்யாவையும், இயக்குனர் சிறுத்தை சிவாவையும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தையும் பெரிய அளவில் வாழ்த்தி சென்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி தன்னுடைய கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். 

2025ம் ஆண்டு கைதி படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும், நிச்சயம் இந்த திரைப்படத்தில் டில்லி, ரோலக்ஸை நேருக்கு நேர் சந்திப்பார் என்றும் கூறியிருக்கிறார் அவர். ஆகவே தன்னுடைய கைதி திரைப்படம் 2வது பாகம் உருவாகுவது உறுதியானது மட்டுமல்லாமல், இது எல்சியூ திரைப்படம் என்றும், கட்டாயம் ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த திரைப்படத்தில் இருக்கும் என்பதையும் உறுதி செய்து இருக்கிறார் நடிகர் கார்த்தி.

தற்போது கூலி பட பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ், இடையே தனது LCU (சேப்டர் ஸிரோ) குரும்பப்பட பணிகளையும் மேற்கொள்கிறார். அதன் பிறகு அடுத்த ஆண்டு கைதி படத்தின் 2ம் பாகத்தை அவர் இயக்கவுள்ளார். 

Related Video