அத்தானை இம்சிக்கும் கார்த்தி.. கலகலப்பாக வெளியான கார்த்தியின் "மெய்யழகன் பட கிளர்வோட்டம்"

Meiyazhagan Teaser : பிரபல நடிகர் கார்த்தி மற்றும் மூத்த தமிழ் திரையுலக நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள "மெய்யழகன்" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

First Published Sep 7, 2024, 6:23 PM IST | Last Updated Sep 7, 2024, 6:23 PM IST

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகாதது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் அவர் மீண்டும் தனது காமெடி டிராக்கிற்கு மாறி இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் பிரேம்குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள மெய்யழகன் என்ற படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து தங்களது 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கார்த்தியின் அத்தானாக மூத்த தமிழ் திரை உலக நடிகர், கோலிவுட் உலகின் முதல் சாக்லேட் பாய் அரவிந்த்சாமி மிக நேர்த்தியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

தஞ்சாவூரை அடுத்த நீடாமங்கலத்தில் வசிக்கும் நடிகர் கார்த்தி மற்றும் அவரது அத்தான் அரவிந்த்சாமிக்கு இடையே நடக்கும் கலகலப்பான விஷயங்களின் கோர்வையே இந்த மெய்யழகன் திரைப்படம். இந்நிலையில் இப்பொது அந்த படத்தின் டீசர் அதாவது கிளர்வோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Video Top Stories