ஆர்த்தியை பிரிகிறேன்.. நீதிமன்றம் சென்ற ஜெயம் ரவி - மனுவில் குறிப்பிட்டது என்ன?

Jayam Ravi Divorce : நடிகர் ஜெயம் ரவி தனது முன்னாள் மனைவி ஆர்த்தியை பிரிவதாக நேற்று அறிவித்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

Share this Video

கடந்த 2009ம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரபல நடிகர் ஜெயம் ரவி. கடந்த 15 ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து தனது கணவரின் புகைப்படங்களை ஆர்த்தி நீக்கிய நிலையில், விரைவில் அவர்கள் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் நேற்று தாங்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்திருந்தார். 

மேலும் இன்று குடும்ப நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்த அவர், கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஆர்த்தி உடனான தனது திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்களுக்கு விவாகரத்து தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Related Video