படப்பிடிப்புகளுக்கு நடுவே அண்ணாமலையாரை தரிசித்த நடிகர் அருண் விஜய்

வணங்கான் படப்படிப்புக்கு இடையே அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார்.

Share this Video

திருவண்ணாமலை, செஞ்சி, ஆலம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகளுக்கு நடுவே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நடிகர் அருண் விஜய் வருகை தந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன் பின்னர் கோவிலில் அமைந்துள்ள விநாயகர் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் நடிகர் அருண் விஜய்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் அருண் விஜயை பார்த்து ரசிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செஞ்சியில் நடைபெறும் வணங்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனது காரில் புறப்பட்டு சென்றார்.

Related Video