Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!

Actor KPY Bala : பிரபல நடிகர் பாலா, தன்னை இயன்ற அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை செய்து வருகின்றார்.

First Published May 10, 2024, 8:36 PM IST | Last Updated May 10, 2024, 8:36 PM IST

தஞ்சை ஆற்றுப்பாலம் அருகில் புதிதாக "ஹாட் ஸ்பாட்" எனும் ரெடிமேட்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது, இதில் சின்னத்திரை நடிகரும், சமூக பணிகளை செய்து மக்கள் மத்தியில் பெரும் புகழோடு வலம்வரும் KPY பாலா வருகை தந்து சிறப்பித்தார். அப்போது அங்கு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கூடி, பாலாவுடன் Selfie எடுத்து மகிழ்ந்தனர். 

பின்பு தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் 20 தூய்மை பணியாளர்களுக்கு ஷோரூம் சார்பில் புத்தாடை துணிகளை வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மை எந்த அளவிற்கு வரவேண்டும் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் தான் எனக்கு அறிவுரை கூற வேண்டும், பொதுமக்களுக்கு நான் அறிவுரை கூற கூடாது என்றார். 

"என்னால் முடிந்தவரை எளிய மக்களை தேடிச்சென்று கடைசி வரை என்னால் முடிந்த உதவிகளை செய்வேன், பொதுமக்களுக்காக நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அதற்கான ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. என்றார்". மேலும் இளைஞர்களுக்கு நான் ஊக்கம் அல்ல, இளைஞர்கள் தான் எனக்கு ஊக்கம் என்று கூறினார் பாலா. 

Video Top Stories