Rebel.. மமிதா பைஜுவுடன் ரொமான்ஸ் செய்யும் G.V பிரகாஷ் - வெளியான "அழகான சதிகாரி" வீடியோ பாடல்!

Alagana Sathigari Video Song : இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷின் இசை மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரெபேல்.

First Published Mar 18, 2024, 9:51 PM IST | Last Updated Mar 18, 2024, 9:51 PM IST

இந்திய சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, அதே சமயம் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் ஜி.வி பிரகாஷ் குமார். தற்பொழுது இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில், பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான Rebel என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபல மலையாள திரைப்பட நடிகை மமிதா பைஜு இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்த திரைப்படத்திலிருந்து "அழகான சதிகாரி" என்கின்ற வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

வருகின்ற மார்ச் 22ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் 5ம் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றது.

Video Top Stories