வெறுங்கையோடு சென்னை வந்த சூரி.. எல்லாம் நீங்கள் கொடுத்த ஆதரவு - கருடன் வெற்றிக்கு நன்றி சொன்ன சூரி! Video!

Actor Soori : கருடன் படத்தை  வெற்றி படமாக மாற்றிய அனைத்து மக்களுக்கும் தனது நன்றிகளை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் சூரி.

First Published Jun 7, 2024, 9:46 PM IST | Last Updated Jun 7, 2024, 9:46 PM IST

சினிமா கனவோடு சென்னைக்கு வந்த பல பிரபலங்களில் ஒருவர் தான் நடிகர் சூரி. ஆரம்ப காலகட்டத்தில் லைட் மேனாக தனது பயணத்தை கோலிவுட் உலகில் துவங்கிய சூரி, அதன்பிறகு அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க தொடங்கினார். இந்த சூழலில் வெண்ணிலா கபடி குழு என்கின்ற திரைப்படம் சூரியை, பரோட்டா சூரியாக மாற்றியது. 

அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரிக்கு எல்லாமே ஏறுமுகம் தான் என்றால் அது மிகையல்ல. அவர் கோலிவுட்டில் ஜோடி போட்டு காமெடி செய்யாத நடிகர்களை இன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு காமெடி கிங்காக வலம் வந்த நடிகர் சூரி. தற்பொழுது ஹீரோவாகவும் பல படங்களில் தொடர்ச்சியாக கலக்கி வருகிறார். 

இந்த சூழலில் வெற்றிமாறனின் கதை அமைப்பில், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான "கருடன்" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் "கருடன்" படத்திற்கு வரவேற்பு கொடுத்த அனைத்து மக்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி.

Video Top Stories