துணிவு படப்பிடிப்பில் டான்சருடன் நடிகர் அஜித்..! வைரலாகும் வீடியோ..!

துணிவு படப்பிடிப்பு தளத்தில் டான்ஸர் ஒருவர் அஜித்துடன் நெருக்கமாக நின்றபடி எடுத்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Share this Video

அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள, 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் அஜித், தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்தார் என புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகி வைரலானது.

இதை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் இணைவாரா? அல்லது பைக் பயணத்தை தொடர்வாரா? என ரசிகர்கள் ஒருபக்கம் கேள்வி எழுப்பி வரும் நிலையில், எதுவாக இருந்தாலும் 'துணிவு' படத்தின் ரிலீசுக்கு பிறகே தெரியவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் தன்னுடைய புகைப்படம் எடுக்க ஆசை பட்ட டான்சர் ஒருவருடன், எடுத்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண் அஜித் மேல் கை வைத்து நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார். 

கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள, அஜித்தின் துணிவு திரைப்படம்... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதே தினத்தில், விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் வெளியாக உள்ளது. எனவே இந்த பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சில சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸில் இருந்து பின்வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Related Video