Asianet News TamilAsianet News Tamil

Watch: ஹன்சிகாவாக மாறிய யோகி பாபு..! கலக்கல் காமெடியுடன் வெளியான 'பார்ட்னர்' பட ட்ரைலர்!

இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில், ஹன்சிகா, ஆதி, யோகி பாபு, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்ட்னர்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Jul 1, 2023, 7:20 PM IST | Last Updated Jul 1, 2023, 7:20 PM IST

பொதுவாக காதல், ஆக்சன், ஹாரர், போன்ற கதைகளை திரைப்படம் எடுப்பதை விட காமெடி படத்தை இயக்குவது மிகவும் கடினம். காரணம் அந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள், தத்ரூபமாக நடித்தால் மட்டுமே ரசிகர்கள் சிரிப்பார்கள். சிரிப்பு வராத மாதிரி காமெடி பண்ணா.. டென்சன் ஆகிவிடுவார்கள்.

இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, காமெடி களத்தில் வித்தியாசமான திரை கதையோடு உருவாக்கி உள்ளது 'பார்ட்னர்' திரைப்படம் என்பது தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.  ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பாலக்  லால்வாணி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான்விஜய், ரவி மரியா, டைகர் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சயின்டிஸ்ட்டாக  நடித்திருக்கும் பாண்டியராஜனிடம்  இருந்து ஃபார்முலா ஒன்றை திருடப் போகும் யோகி பாபு, ஊசி ஒன்றால் ஹன்சிகா மோத்வானி உருவத்திற்கு மாற, பின்னர் மீண்டும் யோகி பாபு தன்னுடைய நிஜ உருவத்திற்கு மாறினாரா? இல்லையா என்பதை சுவாரஸ்யமான கதைகளத்துடன் காமெடியாக இயக்கியுள்ளார் மனு தாமோதரன். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். தற்போது வெளியாகி உள்ள 'பார்ட்னர்' படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.