Asianet News TamilAsianet News Tamil

Watch: தளபதிக்கு மாற்றுத்திறனாளி மாணவன் கொடுத்த பரிசு! பாராட்டிய விஜய் முன் கண்கலங்கிய தருணம்! வீடியோ

விஜய்யிடம் பாராட்டை பெற்ற மாற்றுத்திறனாளி மாணவன் கண் கலங்கிய வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

First Published Jun 17, 2023, 2:48 PM IST | Last Updated Jun 17, 2023, 2:48 PM IST

தளபதி விஜய் தமிழகத்தில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி சான்றிதழ்கள் வழங்கிய நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் விஜய்க்கு, தன்னுடைய கைகளால் வரைந்த, போட்டோ பிரேம் ஒன்றை வழங்கினார்.

இந்த பரிசினை, அந்த மாணவர் பக்கத்திலேயே அமர்ந்து, பிரித்து பார்த்த விஜய்... இதைவரைந்தது இரண்டு கைகளையும் இழந்த மாணவர் என தெரிந்ததும், அவரை கட்டி அணைத்து பாராட்டினார்.

விஜய்யின் பாராட்டை பெற்ற அந்த மாற்றுத்திறனாளி மாணவன், ஆனந்த கண்ணீர் விட்டார். இது குறித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Video Top Stories