Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு.. 2 பெண்கள் உட்பட 6 பேர் காயம்..

நிவாரண நிகழ்ச்சியே முடித்துவிட்டு நடிகர் விஜய் கிளம்பும் போது அவரை காண ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை வெள்ள பாதிப்பு சரியாவதற்குள், டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் அதிகனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், பலர் தங்களது வீடுகளை இழந்தள்ளனர். மேலும், இந்த 4 மாவட்டங்களில் விவசாய நிலங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

அதேபோல், பொதுச் சொத்துகளும் சேதமடைந்துள்ளன. மக்கள் தங்களது வாழ்நாள் பொருளாதாரத்தை இயற்கையிடம் பறிகொடுத்துவிட்டு, நிற்கதியாய் போக்கிடம் இல்லாமல் நிற்கின்றனர். பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களால் முயன்ற உதவியை அப்பகுதி மக்களுக்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளையும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குமாறு நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கேடிசி நகரில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் வழங்கவிருக்கிறார். 

விஜய் கிளம்பியபோது, வெளியில் கூடியிருந்த மக்கள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் விழுந்து காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உட்பட காயமடைந்த 6 பேருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

Video Top Stories