25வது திருமண நாளை சிம்பிளாக கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி! வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித்குமார் தன்னுடைய காதல் மனைவி ஷாலினி உடன் தனது 25வது திருமண நாளை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

Ajith and Shalini's 25th wedding anniversary celebration! நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஏப்ரல் 24ந் தேதி திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தங்களுடைய 25வது திருமண நாளை இந்த ஆண்டு கொண்டாடி உள்ளது. இதையொட்டி சிம்பிளாக தன் மனைவி ஷாலினி உடன் கேக் வெட்டி தங்கள் திருமண நாளை நடிகர் அஜித்குமார் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் அமர்க்களம் படத்தில் நடித்தபோது காதலித்தனர். அப்படத்தின் நடித்து முடித்த கையோடு திருமணமும் செய்துகொண்டர். அஜித்தை கரம்பிடித்த பின்னர் சினிமாவை விட்டு விலகிய ஷாலினி, அதன்பின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் இருக்கின்றனர்.

கார் ரேஸில் பங்கேற்று வருவதால் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டிலேயே இருந்த அஜித், தன் திருமண நாளை மனைவியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து, ஷாலினி உடன் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோவில் இருவரும் இளமையாக இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு வயசே ஆகாதா என கேட்டு வருகின்றனர்.

Related Video