பெரியார் அறிவியல் மையத்தில் விண்வெளி வீரன் யூரி ககாரின் சிலை திறக்கப்பட்டது !

Share this Video

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் விண்வெளி வீரன் யூரி ககாரினின் சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவரும், விண்வெளித் துறைச் செயலாளருமான முனைவர் வி. நாராயணன், பெரியார் அறிவியல் மைய இயக்குநர் முனைவர் சண்முகசுந்தரம் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிலையைத் திறந்து வைத்துப் பேசிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று முதன்முதலாக விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்த யூரி ககாரினின் இந்த சிலை, மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் விண்வெளித் துறை சார்ந்த தேடலையும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

Related Video