அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல் !

Share this Video

Mannargudi MLA Kamaraj: மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ், சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், அமமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்து கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் உரையாற்றினர். அப்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் பேசுகையில்: முதல்வராக பொறுப்பேற்றவுடன் நீங்கள் கையெழுத்திட்ட மூன்று அறிவிப்புகளும் தமிழ்நாட்டுக்கு உதவும் திட்டங்கள். நீங்கள் நல்லாட்சி தர வேண்டும். 5 ஆண்டுகால சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும். 50 ஆண்டுகால ஆட்சிக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் இளைஞர்களும் நாங்களும் உங்களை நம்புகிறோம். உங்கள் அரசு தொடர்வதற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video