சட்டம் ஒழுங்கு சீர்கேடு...அதிமுக இணைப்பு சாத்தியமா? விமான நிலையத்தில் வி.கே.சசிகலா அளித்த பேட்டி!

Share this Video

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் அதிமுக தலைவர் வி.கே. சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுக இணைப்பு குறித்தும், மாநிலத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு காவல்துறையை, தற்போதைய ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் சரியாகப் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், ஆனால் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து இறுதியில் மக்கள் மட்டுமே நல்ல முடிவை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Video