"தற்குறி கூட்டம் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது!" – விஜய் கடும் விமர்சனம்

Share this Video

திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது வழக்கமான பாணியில் நேரடியாகவும் அதிரடியாகவும் பேசிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததுடன், தனது அரசியல் பயணம் மற்றும் மக்கள் ஆதரவு குறித்து நம்பிக்கையுடன் பேசினார். "எதிர்க்கட்சிகளால் ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. கல்யாண வீட்டுக்கு போனாலும் எங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்று விஜய் தெரிவித்தார். மேலும், "மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றியவர்கள் இன்று ஏமாந்து போயிருக்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video