ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!

Share this Video

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதால், விஜய்யின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. பனையூர் அலுவலகத்திலிருந்து ஆளுநர் மாளிகை சென்ற அவர், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆளுநரைச் சந்தித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாள் அவகாசம் கோரியுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சியைச் சமாளிப்பது விஜய்க்குப் பெரும் சவாலாக இருக்கும். விரைவில் அவர் முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் வாழ்வின் முக்கிய 'அக்னிப் பரீட்சையாக' கருதப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video