சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!

Share this Video

சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே எதிர்பாராத விதமாகக் கடும் மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தின் நேரமில்லா நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் திரவியம், தமிழக முதலமைச்சர் விஜயைப் புகழ்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள், அவருக்கு எதிராக அவையிலேயே கடுமையாகக் கூச்சலிட்டு முழக்கங்களை எழுப்பினர். "நம்பிக்கை துரோகி காங்கிரஸ்" என்று திமுகவினர் உரக்க முழக்கமிட்டதால் அவையில் கடுமையான அமளி நிலவியது. சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர மேயர் பிரியா தொடர்ந்து எச்சரிக்கை மணியை (Bell) ஒலித்தும் இருதரப்பு கவுன்சிலர்களும் அடங்காமல் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். திமுகவினரின் இந்த கடும் எதிர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இந்த மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video