மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம் : தாராபுரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

Share this Video

தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமா அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பிரச்சாரத்தின் போது உரையாற்றிய அவர், தேர்தல் என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமல்ல, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நேரம் என்றும், மக்கள் நலன் சார்ந்த அரசியலே வலிமையான அரசியல் என்றும் குறிப்பிட்டார். வேட்பாளர் சத்யபாமாவுக்கு வாக்களிப்பது தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கும் வாக்கு என்று கூறி அவர் வாக்கு சேகரித்த முக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Related Video