தமிழ்நாட்டில் தவெக அரசின் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை ! திமுக எம்பி கனிமொழி காட்டமான பேச்சு!

Share this Video

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, தற்போதைய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் குற்றம்சாட்டினார். சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், காவல்துறை ஆளுங்கட்சியின் ஐடி விங் (IT Wing) போல் செயல்படக் கூடாது என்று விமர்சித்தார். மேலும், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பொருட்களின் விலையைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறிய அவர், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Related Video