நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?

Share this Video

தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் சோலோவாக தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கினார். அவர் கட்சி தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. அக்கட்சியால் தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையால் திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையும் சூழல் உருவாகி உள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதையே பிரதிபலிக்கின்றன. இந்த தேர்தலில் தவெக கட்சி பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேச்சு அடிபட்டு வந்தது. விரைவில் அறிவிப்பு வரும் என்றும் கூறப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video