
விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவில் டெலிவரி பாய்களுக்கு சீட் கொடுப்பதாக தெரிவித்தார். பாஜக கூட்டணியில் விஜய் வருவது குறித்து கேட்டதற்கு, தமிழக அரசியலில் கூட்டணிகளை வலுப்படுத்துவது மாநிலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் எனவும் NDA கூட்டணியை வலுப்படுத்துவதில் கட்சி தலவைர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே விருப்பம் எனவும் இது குறித்த ஆலோசனைகள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தினகரன் கூறினார். பிரதமரின் தமிழக வருகை கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும், நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
