திருச்சியில் ஆரோக்கிய உணவு வீதி தொடக்கம் ! ஸ்மார்ட் கார்டு வசதியுடன் தள்ளுவண்டி கடைகள் திறப்பு!

Share this Video

தமிழ்நாட்டின் முதல் ‘ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு வீதி’ (Healthy and Hygienic Food Street) திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 39 உணவு வியாபாரிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வசதிக்காகப் பணமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்மார்ட் கார்டு’ வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு புதிய உணவக வீதியைத் தொடங்கி வைத்து சிறப்பித்தார். சுகாதாரம் மற்றும் தரமான உணவை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட இந்த உணவு வீதியின் காட்சித் தொகுப்புகள் மற்றும் அமைச்சரின் சிறப்புப் பேட்டி இதோ!

Related Video