குற்றவாளியைப் பாதுகாப்பதா மாற்றம்? - தவெக அரசைக் கண்டித்து பெண்கள் மாதர் சங்கத்தினர் போராட்டம் !

Share this Video

கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பித் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் ஆளுங்கட்சி (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் மற்றும் அவரது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் (AIDWA) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான பாலபாரதி, ஒரு மாவட்டப் பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது தமிழகத்திற்கே தலைகுனிவு எனக் குறிப்பிட்டார். சம்பவம் நடந்து இரண்டு மாதங்களாகியும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளியை ஆளுங்கட்சி பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

Related Video