மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!

Share this Video

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் தங்களது முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.மாட்டுத் தீவனத்தில் கலப்படம்: ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் கால்நடைத் தீவன மூட்டைகளில் எடையை அதிகரிப்பதற்காக மணல், மண், குச்சிகள் மற்றும் கற்கள் கலப்படம் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், சம்பந்தப்பட்ட தீவனக் கடைகள் மற்றும் நிறுவனங்களை ஆய்வு செய்து உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Related Video