
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழா !
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 15) வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம், திருக்கோவில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலையெனத் திரண்டுள்ள பிரம்மாண்ட வான்வழி (Drone) காட்சிகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் குவிந்துள்ள பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.