தூத்துக்குடி சந்தையில் கார்த்திகை தீப சிறப்பு விற்பனை: பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் !

Share this Video

திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கறி மற்றும் பழ சந்தையில் பாரம்பரிய பண்டிகைப் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. பண்டிகை வழிபாட்டிற்குத் தேவையான பனை ஓலை, எலுமிச்சம்பழம், வாழைத்தார், வாழைக்காய் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் சந்தைக்கு அதிகளவில் வரத்து தொடங்கியுள்ளன. இவற்றை வாங்குவதற்காகப் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் சந்தையில் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். பண்டிகையை முன்னிட்டு பொருட்களின் வரத்து அதிகரித்துள்ளதாகவும், விற்பனை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் வியாபாரிகள் அழகுராஜா மற்றும் ஆசீர்வாதம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Video