திருச்செந்தூர் முருகன் கோவிலில் களைகட்டிய சூரசம்ஹார பெருவிழா: கடல் அலையெனத் திரண்ட பக்தர்கள் !

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர். இதனை முன்னிட்டு, திருக்கோவில் ராஜகோபுரம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டுள்ள பிரம்மாண்ட வான்வழி (Drone) காட்சிகள் வெளியாகியுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடற்கரை மற்றும் கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன் சூரசம்ஹார நிகழ்வைப் பரவசத்துடன் கண்டு தரிசித்து வருகின்றனர்.

Related Video