அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ! செல்லூர் ராஜு பேட்டி

Share this Video

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, தமிழக அரசின் கடந்த ஆறு மாத காலச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், எங்கு பார்த்தாலும் திருட்டு, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் அவல நிலை நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஒரு சட்டமன்ற உறுப்பினரே மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளதாகக் கூறிய அவர், இந்த ஆட்சிக்கு மைனஸ் மதிப்பெண் தான் வழங்க முடியும் என்றார்.

Related Video