ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் ஆலயத்தில் சகஸ்ரதீப வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!

Share this Video

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில், 25-ஆம் ஆண்டு சகஸ்ரதீப வழிபாடு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, கோயில் வளாகம் முழுவதும் நெய் மற்றும் எண்ணெய் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியில் கோயில் வளாகம் முழுவதும் ரம்மியமாகக் காட்சியளித்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்த காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Related Video