
ஊட்டியில் உறைய வைக்கும் குளிர்: தொடர் உறைபனியால் தேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு !
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரண்டாவது நாளாகக் கடும் உறைபனிப் பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, பசுமையாகக் காட்சியளித்த தேயிலைத் தோட்டங்கள் முழுவதும் உறைபனி படர்ந்து, வெள்ளை நிறக் கம்பளம் விரித்தாற்போல் ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிக்கும் இந்தக் கடும் உறைபனியால் இப்பகுதியில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. தேயிலைத் தோட்டங்களில் படர்ந்துள்ள உறைபனி குறித்த காட்சிகளும், நிலவும் தட்பவெப்ப நிலை குறித்த பொதுமக்களின் கருத்துகளும் வெளியாகியுள்ளன.