
காஞ்சிபுரம் : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா!
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளுடன் விமரிசையாகத் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.