
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம் !
தமிழ்நாடு, கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருமானிலையூர், செல்லாண்டிபாளையம், திருக்காம்புலியூர், வெங்கமேடு, காந்தி கிராமம் போன்ற முக்கியப் பகுதிகளில் அதிகாலை முதலே கடுமையான அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பார்வைத்திறன் (Visibility) பெருமளவு குறைந்துள்ளதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் மெதுவாகச் சென்று வருகின்றனர். அதேவேளையில், கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களை நினைவூட்டும் வகையில் இதமான குளிர்ந்த வானிலை நிலவுவதால் கரூர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.