சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு: ஆளும் அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

Share this Video

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், நிர்வாகச் சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும் ஆளும் அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆறு மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களின் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை அரசு தடுக்கத் தவறிவிட்டதாக விமர்சித்தார். மேலும், ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து எந்தவொரு புதிய பெரிய நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசால் பெயர் மாற்றம் மட்டுமே செய்ய முடிகிறதே தவிர, மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களைக் கொண்டு வர முடியவில்லை எனத் தெரிவித்தார். அதிமுக மிகவும் வலுவாக இருப்பதாகவும், எப்போது பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல் வந்தாலும் அதனைச் சந்தித்து வெற்றி பெற அதிமுக தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Video