கள்ளக்குறிச்சி : எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகாரைக் கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

Share this Video

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், தீயிட்டுத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், சட்டமன்ற உறுப்பினராக இருக்க அருள் விக்னேஷுக்கு தகுதியில்லை எனவும் கூறி போராட்டக்காரர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இது தொடர்பான போராட்டக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Related Video