
குரூஸ் பெர்னாண்டஸின் 157-வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஸ்ரீநாத்!
தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்றிய ராவ் பகதூர் குரூஸ் பெர்னாண்டஸின் 157-வது பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 15) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அ. ஸ்ரீநாத் நேரில் சென்று மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு "ஐயா ராவ் பகதூர் புகழ் வணக்கம்" என முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்