கோவை: வாக்காளர் விழிப்புணர்வு வினாடி-வினா, கட்டுரைப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

Share this Video

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இளம் வாக்காளர்களிடையே தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் மாவட்ட அளவிலான வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்படும் 760-க்கும் மேற்பட்ட தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் (ELC) மூலம் நடத்தப்பட்ட முதற்கட்டப் போட்டிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபாட் (VVPAT) செயல்பாடுகள் குறித்து இதன் மூலம் மாணவர்கள் அறிந்துகொண்டனர். இது தொடர்பான காட்சிகள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், அரசு சட்டக் கல்லூரி மாணவி சுதேஷ்னா, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அஷ்வந்த், அதிஷ் ஆகியோரின் பேட்டிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Related Video