
காவிரி துலா உற்சவப் பெருவிழா: மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கோவில் தேரோட்டம்!
மயிலாடுதுறையில் உலகப் பிரசித்தி பெற்ற காவிரி துலா உற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, வள்ளலார் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ வதான்யேஸ்வரர் திருக்கோவிலின் திருத்தேரோட்டம் இன்று (நவம்பர் 15) வெகு விமரிசையாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டத் திருத்தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருள, மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "ஹர ஹர மகாதேவா" என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்த திருத்தேரைப் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.