"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு!

Share this Video

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக பண பலத்தையும், அதிகாரத்தையும் கொண்டு தேர்தலில் வெல்லப் பார்ப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலனை விடத் தன் குடும்ப ஆட்சியைத் தக்கவைப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் அவர் சாடினார்.மேலும், "எல்லோரையும் நேசிக்கும் பண்புள்ள ரஜினிகாந்தைத் தவறாகப் பேசுவது முறையல்ல" எனக் குறிப்பிட்ட அவர், ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை வன்மையாகக் கண்டித்தார். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ரஜினியின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதே நயினார் நாகேந்திரனின் கருத்தாக உள்ளது.

Related Video