இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி - திருமாவளவன்

Share this Video

வி.சி.க. தமிழ்நாட்டில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள். வி.சி.க-வின் உயர்நிலைக் கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறவும், ராஜ்யசபா இடத்தைப் பெறவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அது குறித்து முதல்வரிடம் பேசினோம். 23 கட்சிகள் இருக்கும் கருத்தியல் சார்ந்து இயங்குகிற கூட்டணி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி. இந்திய அளவில் மதவெறி, மதவாத சக்திகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கும் கூட்டணி என கூறினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video