
தேவர் ஜெயந்தி விழா: மலர் தூவி மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு தேவர் அய்யாவின் நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தினர்.