
Tasmac: 'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!
டாஸ்மாக் பார்கள் விதிகளில் தமிழக அரசு தளர்வுகளை கொண்டு வந்தது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் இது பொதுமக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வரும் நிலையில், அரசுக்கு வருமானம் ஈட்டிக்கொடுப்பதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த விஜய்யின் தவெக அரசு சுமார் 700 டாஸ்மாக் கடைகளை மூடினாலும் மறுபக்கம் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.