சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!

Share this Video

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நவம்பர் 15 அன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு நடத்தினார். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 4,298 காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், கடற்கரையில் நீச்சல் தெரிந்த மீனவர்களின் வழிகாட்டுதல், ஆம்புலன்ஸ் வசதிகள், ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்புகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Video