
அடக்குமுறையால் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது ! CPI வீரபாண்டியன் அதிரடி பேட்டி
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் மாணவ-மாணவிகள் சென்னையில் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழக மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் ஊடகங்களுக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். அப்போது நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், மத்திய அரசின் பிடிவாதப் போக்கையும் மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்.