
ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: மதுரையில் தொல். திருமாவளவன் வேண்டுகோள்!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குத் திருட்டு நடத்தப்பட்டு நாட்டிலும் ஜனநாயகத்திலும் அரசமைப்புச் சட்டத்திலும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி இந்தியா கூட்டணி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பிற்கான முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.