
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க மனுக்கள்: இரு தரப்பிலும் நேரில் விசாரணை நடத்த சபாநாயகர் முடிவு!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் தொடர்பான விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே உரிய தீர்ப்பு அளிக்கப்படும் எனத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதற்கட்ட விசாரணை முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்ததால் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், விரைவில் புகார் அளித்தவர்கள் மற்றும் விளக்கம் அளிக்க வேண்டிய இரு தரப்பினரையும் நேரில் அழைத்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறினார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் காட்சிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.